#பொத்துவில் சியாத்.
பாடசாலைகளில் இடம்பெறும்
வித்தியாரம்ப நிகழ்வு எதற்காக இடம்பெறுகிறது என்பதை அறிந்தவர்களாக அந்த நிகழ்வை நடாத்துங்கள்.
வித்தியாரம்ப நிகழ்வு எனும் பெயரில் உங்களது வித்தியாசமான நகர்வுகள் மானவச் செல்வங்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பாதிக்கிறது இதை நீங்கள் புரிந்து கொள்ளாத ஆசிரியர்களாக இருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
இப்படியான விழாவை ஏற்பாடு செய்து மாணவர்களின் பணத்தைக் கொண்டு உங்களை நீங்கள் கெளரவிப்பதும் அலங்கரிப்பதும் பொன்னாடை போற்றுவதும் பூமாலை போடுவதுமான இந்த வித்தியாச நிகழ்வு இந்தக் காலத்திற்கு தேவைதானா என்பதை சற்று சிந்தியுங்கள்.
சமயோசிதமாக சிந்தித்து காலம் அறிந்து பயிரைச் செய்யுங்கள் உங்களின் நலவுக்காக அடுத்தவர்களை பயன்படுத்தாதீர்கள்.
குறிப்பாக கலாச்சாரத்தை மீறி நடந்து கொள்வதையும் மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆசிரியை, ஆசிரியர்கள் இணைந்து சிறந்த பிரஜைகளை உருவாக்குங்கள்.
சில நேரலைகளை பார்க்கவே முடியவில்லை சம் சமூதாயம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழும்புகிறது.
இதனை அவசியமாக கவனத்திற் கொண்டு உங்களது நிகழ்வுகளை நடாத்துங்கள்.
இப்பதிவு தனிப்பட்ட ஒரு நிகழ்வுக்கானதல்ல பொதுவானதே...
மாணவர்களிடம் இருந்து பணம் அறவிட்டு ஆடம்பர நிகழ்வுகளை நடாத்துவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்குங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரகத்தை தருவான்.
Post a Comment
Post a Comment