நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு பிறீடம் விளையாட்டு கழகமும், சுதந்திர சமூக நலன்புரி மையமும் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, தெரிவு செய்யப்பட்ட வறுமையான குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளும், பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிறீடம் விளையாட்டு கழகத்தினதும், சுதந்திர சமூக நலன்புரி மையத்தினதும் தலைவர் எம்.எஸ்.எம். ஹக்கீம் தலைமையில் மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுசையின் வித்தியாலயம், மற்றும் கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அப் பாடசாலைகளின் அதிபர்களான ஏ.எல்.எம்.ஏ. நளீர், எம்.ஐ.எம். அஸ்மி ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இக் கழகத்தின் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள உறுப்பினர்களின் நிதியுதவியில் வழங்கி வைக்கப்பட்ட இவ்வுதவி திட்டத்தை கழகத்தின் ஆலோசகர் எம்.எம்.ஆர். நிறுவன பணிப்பாளர் ஏ.மன்சூர், கழகத்தினதும் அமைப்பினதும் செயலாளர் எஸ். நவாஸ், ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தார்கள். இவ் உதவிகளை பெற்றுக்கொள்ள அக் குடும்பங்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உதவிப் பொருட்களை பெற்றுக்கொண்டார்கள்
Post a Comment
Post a Comment