உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உத்தரபிரதேச காவல்துறை இதுவரை ஆதிக் மற்றும் அஷ்ரஃப் கொலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதிக் மற்றும் அஷ்ரஃப் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேமராவில் பதிவாகி அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் காணொளியில், தாக்குதல் நடத்தியவர்கள் போலீசார் பதிலடி கொடுக்கவில்லை.
இந்தப் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பிய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "உத்திர பிரதேசத்தில் குற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளன, குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால், பொது மக்களின் பாதுகாப்பு என்னாவது?
இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி உருவாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சூழலை உருவாக்குவது போலத் தெரிகிறது,’’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment