போகர் கல்வியகம் திறப்பு





(வேதசகா)

 "3 கிராமங்கள் ஒரு சிந்தனை" என்ற திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய அட்டப்பள்ளம், திராய்க்கேணி, நிந்தவூர் தமிழ்ப்பிரிவு ஆகிய மூன்று கிராமங்களையும் இணைத்து இலவச கல்வியகம் ஒன்று நேற்றுமுன்தினம் (23) ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

"போகர் கல்வியகம்" என்று பெயரில் இவ் இலவச கல்வியகம் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 போகர் கல்வியக தலைவரும் ,கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவனுமான எஸ். கிருஷாந்த்  தலைமையில் நடைபெற்ற போகர் கல்வியக திறப்புவிழாவில், பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அதிபர் எம் சுந்தரராஜன் மற்றும் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் எஸ் .ரகுநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 மேலும், நட்சத்திர அதிதிகளாக போகர் கல்வியக ஆலோசகர்
ரி புவனராஜா ,ஆலய தர்மகர்த்தாக்களான  த.கோபாலன், எஸ்.சந்திரன் ,அறநெறி ஆசிரியர் உ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அட்டப்பள்ளத்தின் முதலாவது சட்டபீடமாணவி செல்வி கே.சசிந்தினி தனது அனுபவ பகிர்வை அங்கு மேற்கொண்டார்.

விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 போகர் கல்வியகத்திற்கான அனுசரணையை காரைதீவைச் சேர்ந்த  அவுஸ்திரேலியா அளவு நிலஅளவையாளர் சிவ புண்ணியம் லோகேஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் பொறியியலாளர் அ.அருள் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

முதற்கட்டமாக மூன்று கிராமங்களை உள்ளடக்கிய தரம் 4 மற்றும் தரம் 10 மாணவர்களுக்கு கருப்பாடங்களில் இலவசமாக மாலைநேர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.