ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ராக் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபயர்போல்ட் கொலைட் மாடலை தொடர்ந்து ஒரே வாரத்தில் ஃபயர்போல்ட் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும்.
புதிய ஃபயர்போல்ட் ராக் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், மெட்டாலிக் கேசிங், ஏராளமான வசதிகளை வழங்கும் கிரவுன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள 260 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் ஹெல்த் சூட், ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
Post a Comment
Post a Comment