சற்று முன்னர் நிந்தவூர் ஜேர்மன் நட்புறவு பாடசாலை பிரதேசம் சுற்றிவளைப்பு.!
09 பேர் அதிரடியாக கைது.
(செய்திப் பிரிவு)
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமான, ஜேர்மன் நட்புறவு பாடசாலையினைச் சுற்றியுள்ள பிரதேசம் சற்று முன்னர் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்ட போது, போதைப்பொருள் பாவித்த 09 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்ததுடன், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளையும், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளும் தற்போது முடக்கி விடப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இப்புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இருக்க வேண்டியவர்கள், பொலிஸ் நிலையங்களிலும், விளக்கமறியல்களிலும் இருப்பது கவலை தருகின்றது.
Post a Comment
Post a Comment