நீர்கொழும்பு சாத்தார் ஆசிரியர் காலமானார்.
நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், உதவி அதிபருமான ஓய்பெற்ற சாத்தார் ஆசிரியர் (வயது 81) Rafaideen abdul shaththar இன்று காலை காலமானார்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)
பெரியமுல்லை லாசரஸ் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்தில் ஜனாஸா தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அல் ஹிலால் மத்திய கல்லூரியின் மிகவும் பிரபல்யமான ஆசிரியர் இவர். சித்திரப்பாட ஆசிரியரான இவர், விளையாட்டு, பாடல் மற்றும் கலை இலக்கிய விடயங்களில் திறமை காட்டியவர். மாணவர்களுக்கு வழி காட்டியவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகள் இரு மகன்கள். இவரது மூத்த மகன் முஹம்மத் சியாம் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் ஒரு பாடகர். தற்போது வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இரண்டாவது மகன் Mohamed Sarooj சமூக சேவை விடயங்களில் அதிக ஈடுபாடு உடையவர். மர்ஹும் சத்தார் ஆசிரியரின் மனைவியும் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதி வருபவராவார்.
எப்போதும் உற்சாகமாக காணப்படும் இவர் எல்லோரோடும் அன்பாக பழகி வருபவர். தன் சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை உடையவர். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். தனது கருத்தை எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.
பெரியமுல்லை சமூகம் முக்கியஸ்த்தர் ஒருவரை இழந்துவிட்டது.
இன்று இரவு இரவு 10:30 மணிக்கு
பெரியமுல்லை யூசுபியா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம் பெற்று,
நீர்கொழும்பு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெற உள்ளது.
ஏக இறைவன் அவருக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக.
Post a Comment
Post a Comment