பாறுக் ஷிஹான்
19 வருட இழுத்தடிப்பிற்கு முற்றுப்புள்ளி- பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வீடுகள்
2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுன மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது.
குறித்த வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் தொடர்ந்தும் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாகவே இந்த வீடுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
பல அரசியல் பிரமுகர்களும்இ அதிகாரிகளும் இந்த வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டு அதனை விரைவில் வழங்குவோம் என்று வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இன்றுவரை அவர்களால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது.
குறித்த விட்டுத் திட்ட வீடுகள் உரிய மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்ததனால் அந்த வீடுகள் சேதமடைந்து உடைந்து களவாடப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது.இந்நிலையில் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அண்மையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது மருதமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் மருதமுனை மேட்டுவட்டை 65 மீற்றர்ர் வீட்டுத் திட்டம் தொடரில் கேள்வி எழுப்பியதுடன் எப்போது இந்த வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும் என்ற கேள்வியையும் கேட்டிருந்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விளக்கம் அளிக்கும்போது இந்த வீட்டுத் திட்டம் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயம்.இனியும் இதனை இழுத்தடிக்காமல் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுயளித்தார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்படும். இதற்காக கல்முனை பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கைகளை எடுத்து உரிய பயனாளிகளை தெரிவு செய்யும் பட்டியலை பூரணப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த வீட்டு திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதற்காக மருதமுனைக்கு அண்மையில் விஜயம் செய்த எஸ்.எம்.எம்.முஷாரப் ஆP 65 மீற்றர் வீட்டுத் திட்டத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொலைபேசியில் தொடர்பு நிலைமைகளை விளக்கினார்.
இதற்கமைவாக ஏப்ரல் பத்தாம் திகதி இந்த வீடுகளை கையளிப்பதற்கான செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபுடன் இணைந்து கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் இந்த வீட்டுத் திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற விடுகள் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விடுகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையிலும் ஒழுங்குபடுத்துவதிலும் முழுமையாக செயற்பட்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், பாராளுமன்ற உறுப்பினரின் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
இணைப்பாளர் பீ.எம்.எம்.ஜ ஃபர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Post a Comment
Post a Comment