கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள சாய்ந்தமருது ஜி.எம்.எம்.பாடசாலையில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா; 2023.04.25 ஆம் திகதி அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் பாடசாலை முன்றலில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியரும் பாடசாலையின் பழைய மாணவருமான எம்.எம்.அல் அமீன் றிசாத் அவர்களும் கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று திட்ட பொறியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் , கல்முனை வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஏ.சஹறூன் மற்றும் மக்கள் வங்கியின் சாய்ந்தமருது கிளையின் பிரதி முகாமையாளர் ஏ.ஆர்.றிஸ்வான் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர் திருமதி றாபி, உதவி அதிபர் எம்.ஏ.சி.எல்.நஜீம் உள்ளிட்டவர்களுடன் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளை வழங்கிய கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாம் வருட மாணவர்களால் புதிய மாணவர்கள் மலையிட்டு இனிப்பு வழங்கியும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment