நூருள் ஹுதா உமர்
2023/2024 ம் ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் மற்றும் 2023/2025 ஆண்டிற்கான புதிய நிருவாக தெரிவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் (AASL) தலைவர் பாலித பெர்ணான்டோ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் அத்துடன் பூரண வழிகாட்டலுடன் இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிகளான வீ.மோகனகுமார் மற்றும் திரு. ஏ.ஏ.யு.பி. ரூபஸ்ரீ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.
15 பிரதேச செயலகங்கள், இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம் ஆகிய 16 சங்க பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2023/2025 ம் ஆண்டுக்கானபுதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவராக எஸ்.ஜி.வி.யு நாராயண ( மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்) , செயலாளராக அலியார் பைஸர் (உடற்கல்வி ஆசிரியர்) பொருளாளராக ஏ.எல்.எம். அஸ்ரப் (இலங்கை இரானுவம்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியாக உப தலைவர்களாக எஸ். அரசரட்ணம் (ஓய்வுநிலை கல்வியதிகாரி), ஏ. சப்ரி நஸார் (மாவட்ட பயிற்றுவிப்பாளர்), ஐ.எல்.எம். இப்ராஹிம் (ஆசிரிய ஆலோசகர்), ஜே. எம். உபசேனே (மாவட்ட பற்றுவிப்பாளர்), எஸ்.எம்.பி. ஆசாத் ( Instructor Phy-Edu SEUSL), எம்.எம். அஸ்மி (உடற்கல்வி ஆசிரியர்), கே. கங்காதரன் (உதவி கல்வி பணிப்பாளர்) ஆகியோரும் , உப செயலாளர்களாக ஐ.எம். கதாபி (நிர்வாகம்) (Instructor Phy-Edu SEUSL), எம்.எச்.எம். அஸ்வத் (தொழில்நுட்பம்) (விளையாட்டு உத்தியோகத்தர்) , உப பொருளாளராக எல். சுலக்ஸன் (விளையாட்டு உத்தியோகத்தர், கணக்கு பரிசோதகர்களாக எம்.எச். ஹம்மாத் (ஆசிரிய ஆலோசகர்), கே. சாரங்கன் (விளையாட்டு உத்தியோகத்தர்), ஊடக பொறுப்பாளராக எம்.வை.எம்.றகீப் (உடற்கல்வி ஆசிரியர்) ஆகியோரும் சங்க அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் போசகர்களாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் (AASL) தலைவர் பலித் பெர்ணான்டோ, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும், சங்கத்தின் அலோசகர்களாக முன்னாள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ. நபார், எம்.ஐ.எம். அமீர் அலியும் தெரிவு செய்யப்பட்டனர்.
8வருட காலமாக இயங்காது மந்தகதியில் காணப்பட்ட மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை வினைத்திறனானதும், செயற்றிறன் உடையதுமாக மாற்றியமைக்க பல முன்மொழிவுகள் முன் மொழியப்பட்டன. இதில் முக்கிய அம்சமாக இவ்வருடத்திற்கான திட்டமாக மெய்வல்லுனர் வீரர்களுக்கான, மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான, மெய்வல்லுனர் தொழில்நுட்பவியலாளர்களுக்கான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டதோடு, புதிய மெய்வல்லுனர் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் செயற்றிட்டமும், அதனை தொடர்ந்து மாவட்ட மெய்வல்லுனர் போட்டியும் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment