(காரைதீவு சகா)
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வது வருட நிறைவையொட்டி கே எஸ் சி(KSC) பிரீமியர் லீக் (Premier League)போட்டி எட்டாவது வருடமாக இன்று(11) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்த மைதானத்தில் நடைபெற்றது.
கழகத்தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட ஏழு ஓவர் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன.
காரைதீவின் முன்னாள் வீரரும் மட்டக்களப்பு சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருமான அருளானந்தம் கந்தராஜா, போசகர்களான வே.இராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
Post a Comment
Post a Comment