கல்முனை சாஹிறாவுக்கு "Broiler" Project




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் உள்ளடங்கிய பாடசாலை நிர்வாகத்தினருக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து விரிவாக அறியப்பட்டதோடு அதற்கு தடையாக உள்ள விடயங்கள் பழைய மாணவர்களின் முக்கிய பிரிவினால் கோடிட்டுக் காட்டப்பட்டன.  மேலும் பாடசாலையின் விடுதியினை பழைய நிலமைக்கு கொண்டுவந்து மாணவர்களை தங்க வைத்து பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் "Broiler" Project எனும் திட்டம் பழைய மாணவர்களின் முக்கிய பிரதி நிதிகளால் முன்மொழியப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பழைய மாணவர்கள் சார்பாக பொறியியலாளர் ஏ.எச்.ஏ.ஜெளஸி, பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், ஜூனைதின் மான்குட்டி, ஆசிரியர் றிசாட் சரிப், பொறியியலாளர் கமால் நிசாத், ஏ.எம். ரம்ஸான் மற்றும் ஏ.எம்.சனூன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடசாலை சார்பாக அதிபர், பிரதி அதிபர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் எம்.என்.எம். தில்ஷான், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர், பாடசாலை முகாமைத்துவக் குழுவின் செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பிராந்தியத்தில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கும் வெளியீடுகள் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது கவலைப்படும் அளவில் குறைந்து காணப்படுவதை அவதானித்த, பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இணைந்து; சமூக ஊடகங்களில் குழுமங்களை உருவாக்கி விவாத்தித்தன் பயனாக குறித்த சந்திப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.