இஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பும், குடும்ப வாழ்வியலும்"
நூருல் ஹுதா உமர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இளம் குடும்பப் பெண்களுக்கு "இஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பும், குடும்ப வாழ்வியலும்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு செயலமர்வு புதன்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் தலைப்பீட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் ஆகியோரின் வழிகாட்டலில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். பவாஸ், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் எம்.முபிதா, பெருளாளர் ஏ.எம்.பசீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளம் குடும்பப் பெண்களுக்கு "இஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பும், குடும்ப வாழ்வியலும்" எனும் தலைப்பில் மெளலவியா எஸ்.எம்.எம்.ஹினாயா, ஆசிரியை எம்.ஜே. ஹசீனா ஆகியோர் மார்க்க உபதேசம் வழங்கினர். மேலும் நிகழ்வில் மார்க்க உபதேசம் வழங்கிய மெளலவியா எஸ்.எம்.எம். ஹினாயா, ஆசிரியை எம்.ஜே. ஹசீனா ஆகியோரை சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம்.முபிதா ஆகியோர் இணைந்து மகளிர் தின அன்பளிப்பு வழங்கி கெளரவித்தனர்.
நிகழ்வினை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment