(சுகிர்தகுமார்) 0777113659
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக இன்று (10) கண்ணகிகிராமத்தில் 650000 ஆயிரம் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று திறந்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடே இன்று திறந்து வைக்கப்பட்டு மிகவும் வருமானம் குறைந்த நிலையில் உள்ள குடும்பமொன்றிடம் கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பு விழாவில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்து கொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் வடக்கு வலய வங்கி முகாமையாளர் கவிதா கிரிதாசன் திட்ட முகாமையளர் சத்தியப்பிரியன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேநேரம் சமுர்த்தி வீடமைப்பு அதிஸ்டஇலாப சீட்டெழுப்பின் மூலம் இரண்டு இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டவருக்கான காசேலையும் பிரதேச செயலகத்தில் வைத்து உதவிப்பிரதேச செயலாளரால் கையளிக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment