வி.சுகிர்தகுமார் 0777113659
ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசினால் முன்னெடுக்கப்படும் இலவச அரிசி வழங்கும் தேசிய நலன்புரி வேலைத்திட்டம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் அமைச்சினூடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் 2022 ஃ 2023 ஆம் பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல்கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்; இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்பை கிராமத்தில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமான முறையில் இன்று (26) இடம்பெற்றதுடன் 341 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலிக்கம்பை சென்சபேரியர் தேவாலய பங்குத்தந்தை மில்பர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹுசைன்டீன் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாதமொன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அரிசி வழங்கலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மக்கள் தெரிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment
Post a Comment