அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியினூடாக மாடுகள் கடத்தப்படுவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரு சந்தேக நபர்களுடன் எருமை மாடுகள் சிறிய ரக லொறி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையானது கடந்த 25.03.2023 மேற்கொள்ளப்பட்டதுடன் சந்தேக நபர்கள் மாடுகள் தொடர்பில் தொடர்விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையிலான பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஷ்கர் பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிகுடி, மத்தியமுகாம், வெல்லாவெளி, ஆகிய பகுதியில் மாடுகள் காணாமல் சென்றுள்ளதா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர் மீட்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தொடர்பாகவும் மீட்கப்பட்ட மாடுகள் கடத்தப்பட்டு எடுத்து வரப்பட்டனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment