( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு சாரதா சிறுமியர் இல்லம் இருந்த இடத்தில் விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம் நேற்று முன்தினம் (7) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகைதந்த உலகளாவிய இராமகிருஷ்ண மிஷன் வேலூர் தலைமையக உதவிப் பொதுச்செயலாளர் ஸ்ரீமத் சுவாமி சத்யேஷானந்தஜி மஹராஜ் இதனைத் திறந்து வைத்தார்.
கூடவே இல்லத்தில் புத்தகக்கூடம் அலுவலகம் மற்றும் கணினி ஆய்வு கூட்டத்தையும் பூமாலை சுருக்கிழுத்து திறந்து வைத்தார்.
அவருடன் இ.கி.மிஷனின் இலங்கை கிளைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மஹராஜ் மட்டக்களப்பு மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள்,அறநெறி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடு செய்தனர்.
பின்னர் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125வது வருட நிறைவை ஒட்டி சுவாமிகளின் திருவுருவப் படம் கண்ணகி சனசமூக நிலையத்தில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த இல்லத்தில் மலர் அஞ்சலி செலுத்த பட்டது.
அதன் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்திற்கு சென்ற சுவாமி மிஷன் கொடியை ஏற்றி வைத்து விவேகானந்தா மனிதவள மேம்பாடு நிலையத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் இல்ல மண்டபத்தில் இ.கி.மி.சிவானந்தா பழைய மாணவன் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தலில் கூட்டமொன்று இடம் பெற்றது.
கலை நிகழ்ச்சிகளும்,சுவாமிகளின் விஷேட உரைகளும் இடம்பெற்றன.
இ.கி.மிஷன் பழைய மாணவன் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற விழாவில் நன்றியுரையை ஆசிரியர் செ.சிவராஜா நிகழ்த்தினார்.
Post a Comment
Post a Comment