எதிர் நோக்கி வரும் மட்டக்களப்பு தாந்தாமலை மக்களுக்கு ஒரு தொகுதி பாரிய டோர்ச் லைட்டுகள்





 (வி.ரி.சகாதேவராஜா)

காட்டு யானைகளினால் பாரிய உயிராபத்தை எதிர் நோக்கி வரும் மட்டக்களப்பு தாந்தாமலை   மக்களுக்கு ஒரு தொகுதி பாரிய டோர்ச் லைட்டுகளை மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் வழங்கி வைத்தது .

மக்களின் உயிரை காப்பாற்றும் நோக்கில் முதல் கட்டமாக யானைக்கு அடிக்கின்ற பாரிய டோர்ச் லைட்டுகளை நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் ரொட்டேரியன் பு. ரமணன் அவற்றை மக்களுக்கு வழங்கி வைத்தார்.
 உரிய காலத்தில் செய்த உதவிக்காக மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்