( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு மக்கள் வங்கி கிளையில் சர்வதேச மகளிர் தின விழா இன்று(10) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு மக்கள் வங்கியின் புதிய முகாமையாளர் தங்கராஜா கரிகாலன் தலைமையில் விழா சிறப்பாக இடம் பெற்றது.
காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் ,காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஏ.எல்.பாத்திமா றிம்சியா சிறப்பதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வனிதாவாசனா சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற வனிதையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிபர் திருமதி தேவகௌசல்லா குலேந்திரன் வங்கி உதவி முகாமையாளர் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டார்கள்.
Post a Comment
Post a Comment