(சுகிர்தகுமார் )0777113659
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.உதயகுமாரினை வரவேற்கும் நிகழ்வும் வலயத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் அக்கரைப்பற்று விபுலானந்த அபிவிருத்தி நிலைய கட்டடத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் த.கயிலாயபி;ள்ளை தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ஓய்வு நிலை வைத்தியர் சித்திரா தேவராஜன் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் குணாளினி சிவராஜ் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட ஓய்வு நிலை விரிவுரையாளர்கள் அதிபர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் மற்றும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பதவியேற்றிருக்கும் வலயக் கல்விப்பணிப்பாளரை வரவேற்று அனைவரும் உரையாற்றியதுடன் அவரது எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக செயற்படுவதாக கூறினர்.
திருக்கோவில் கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதேநேரம் பாடசாலைகள் மட்டத்தில் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்படக் கூடிய வேலைத்திட்டங்கள் அதற்கான ஒத்துழைப்புக்கள் கல்வி அபிவிருத்தியில் தாக்கம் செலுத்திவரும் போதைப்பொருள் பாவனை அதனை தடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
நிறைவாக தன்னை அழைத்து கௌரவப்படுத்தியதுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.
பல சவால்களுக்கு மத்தியில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பணிகளை தாம் பொற்றுப்பேற்றிருப்பதாகவும் சமூக அமைப்புக்கள் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்போடு வலயத்தின் கல்வி அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்போடு வலயத்தின் கல்வி அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
Post a Comment
Post a Comment