(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிளஸ் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி சீருடைகளை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வு நேற்று முன்தினம் முன்பள்ளிபாடசாலை ஆசிரியை கே ரதி தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் அங்கு தவிசாளர் ஜெயசிறில் சமூக செயற்பாட்டாளர் மதி விரிவுரையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
இந்த சீருடைகளை வழங்கி வைத்தனர்.
சீருடைகளுக்கென தவிசாளர் தனது சொந்த நிதியிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment