அரிசி விநியோகம்





நூருல் ஹுதா உமர்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இன்று (26) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெமீல் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டரை்.

இலவச அரிசி விநியோகம் இன்று சாய்ந்தமருது - 01 ஆம், 05 ஆம் பிரிவு  மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுகளுக்கு தொடராக அரிசி விநியோகம் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் ஆஷிக் இதன்போது தெரிவித்தார்.