கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது.இதன்படி இவ்விடயத்தில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ள செய்திகளும் வெளியாகியுள்ளன.இருந்த போதிலும் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக குற்றவாளிகளை இனம் கண்டு துரித நடவடிக்கை எடுக்க நாங்கள் மாநகர ஆணையாளரிடம் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக முன்னாள் ஆளுநர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகி
Post a Comment
Post a Comment