பெண்கள் உரிமைகளை மேடைகளில் முழங்காது, வீடுகளில் செயற்படுத்துவது சிறப்பு





 வி.சுகிர்தகுமார் 0777113659 


  அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுகளில் பல்வேறு ;கலை நிகழ்வுகளும் பெண்களுக்கான சமூக நல வைத்திய ஆலோசனைகளும் கருத்துரைகளாக வழங்கப்பட்டன.
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பீறா ஒருங்கிணைப்பில்; பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின்; சமூக நல வைத்தியர் ஆமிலா ஜமால்டீன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வஸ்டர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மியா ஜஹான் உளவளத்துணை உத்தியோகத்தர் சிலோஜினி மனோகுமார் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ரூபினா பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சியாமினி சசிகலா முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்;கப்பட்டதுடன் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரின் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளாரின் தலைமையும ;இடம்பெற்றது. துலைமை உரையில் பெண்கள் உரிமை தொடர்பில் மேடைகளில் நாம் பேசிக்கொண்டிருப்பதை விட அதனை வீடுகளில் செயற்படுத்தி காட்டுவதே சிறப்பானது என பிரதேச செயலாளர் வி.பபாகரன் கூறினார்.
இதன் பின்னராக மாணவிகளின் நடனங்களும் மகளிர் தொடர்பான விழிப்புணர்வு கவிதைகளும் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வில் விசேட அம்சமாக சமூக நலன் வைத்தியர் ஆமிலா ஜமால்டீனால் பெண்கள் வாழ்க்கை முறைமை மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம் உடற்பயிற்சி போன்ற விடயங்களை உள்ளடக்கியதான கருத்துரையினை சிறப்பாக வழங்கியதுடன் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
நிகழ்வின் இறுதிக்கட்டமாக கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பீறா மற்றும் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.