சிரமதானப் பணிகள்




 


வி.சுகிர்தகுமார் 0777113659


  'மக்கள் பலம் பலமான அதிகாரத்திற்கு' எனும் தொனிப்பொருளிலான சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டம் இன்றும் நாளையும் (25 26 ) தேசிய ரீதியில் Instrumentation.
இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு வலயத்தில் உள்ள பல பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனையின் பேரில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கிருபாகரன் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் சமுர்த்தி முகாமையாளர் சுரேஸ்காந்த் திட்ட முகாமையாளர் சத்தியப்பிரியன் ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற சிரமதானப்பணிகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆலயங்கள் பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு பிரதேசங்கள் பொதுக்கட்டடங்கள் என பல்வேறு இடங்களிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு பரவக்கூடிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டதுடன் தீயிட்டு அழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.