#PotuvilSiyaath
பொத்துவில் ஆத்திமுனை மையவாடிக்கான சுமார் 1200 அடிகளைக் கொண்ட பாதுகாப்பு சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டத்தை செய்து வருகின்றோம்.
மனாப் டொக்டர் அவர்களின் தலைமையில் இயங்கும் 91 O/L மாணவர் குழுவினர்களின் உதவியினால் அத்திவாரத்தை தவிர்ந்த சுமார் 100 அடி சுற்று மதில் அமைத்து தரும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எம்மிடம் வாக்குறுதியழித்தவாறு இன்று அதன் பணிகளை குழுவின் தலைவர் மனாப் டொக்டர் அவர்களின் தலைமையிலும் வர்த்தகர் நெளசர் அவர்களின் ஆலோசனையிலும் ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த மையவாடியின் வேலைகளை அவசரமாக செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட அவர்களுக்குரிய சுற்றுமதில் தொகுதிக்கான கல் வைக்கும் நிகழ்வில் படத்தில் உள்ள அனைத்து அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதற்கு உதவிய 91 O/L மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆத்மார்த்தமான நன்றிகளையும் தெரிவித்து இவர்களின் நல்வாழ்வுக்காக எமது ஆத்திமுனை பிரதேச மக்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
யா அல்லாஹ் இத்தனை பேர்களிலும் உன்னுடைய தெரிவில் இருந்து நாங்கள் இந்தப் பணிக்கு தெரிவாகியுள்ளோம். அவ்வாறே நாங்களும் தயாராகி முயற்சித்துள்ளோம் இந்தப் பணி உன்னுடைய பணியாகும் இதனை நிறைவுக்கு கொண்டு வரும் அனைத்துச் சக்தியும் உன்னிடமே உள்ளது.
எங்களது முயற்சி மட்டுமே இதில் உள்ளது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இலகுவாகவும் இப்பணியினை முடித்து தருவாய் என நம்புகின்றோம் இவர்களைப் போன்று இன்னும் பலரை குறித்த மையவாடிக்கு உதவி செய்ய வைப்பாயாக
(ஆமீன்)
அதே போல் எமது மையவாடியின் சுற்றுமதில் அமைக்கும் பணிக்காக எனது தலைமையிலும் sphi மலீக் சேர் அவர்களின் வழிகாட்டலிலும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த எமது அமைப்பின் இளைஞர்கள் அனைவருக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளை தெரிவிப்பதோடு இதற்கு உதவி செய்பவர்களோடு இதனை வெளியில் கொண்டு வந்த அனைவருக்கும் இப்பிரதேச மக்கள் துஆ செய்துகொள்ளுங்கள்.
இதேபோல் பழைய மாணவர் குழுவினர்கள், அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என அனைவரும் முன் வந்தாலே குறித்த மையவாடியின் அனைத்து வேலைகளும் சிறப்புடன் நிறைவுபெறும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
யா அல்லாஹ் அனைவருக்கும் நற்சிந்தனையை கொடுப்பாயாக..
Post a Comment
Post a Comment