மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்




 


நூருல் ஹுதா உமர்


இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இணைந்த கரங்கள் அமைப்பின் பங்களிப்போடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து இருநூறுக்கு மேற்பட்ட  மாணவர்களுக்கு இணைந்த கரங்கள்  உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் நூறு  மாணவர்களுக்கு புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்து யா/மருதங்கேணி இ.த.க பாடசாலை, யா/உடுத்துறை இ.த.க ஆரம்ப பாடசாலை, யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம், யா/ உடுத்துறை ம.வி வித்தியாலயம், யா/வெற்லைக்கேணி றோ.க பாடசாலை, யா/கேவில் அ.த.க.பாடசாலை, யா/தாளையடி றோ.க. பாடசாலை, யா/கட்டைக்காடு றோ.க.பாடசாலை,  யா/வெற்றிலைக்கேணி  பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் அதி கஷ்டத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான நவரத்தினம் ரூபரமேஷ், ஸ்ரீ கணேஷ் செலெக்க்ஷன் உரிமையாளர் குகேந்திரான் மாரிமுத்து, ரூபன் தருமலிங்கம் ஆகியோரின் தனிப்பட்ட  நிதி பங்களிப்போடும். இதனுடன் இணைந்து இணைந்த கரங்கள் உறவுகளின் பங்களிப்போடும் இந்த  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு கிளிநொச்சி வைத்திய சாலை மருத்துவர் த. ஜெகதீஸ்வரன், மருதங்கேனி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்லத்துறை ஸ்ரீ இராமச்சந்திரன், பாடசாலையின் அதிபர்களான சிவபாதம் ஜெயந்திரன், சின்னத்தம்பி ரங்கனாதன், ஆசிரியைகள், இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், தெ.சிருஸ்காந், ரெட்ணசிங்கம் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.