பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும். https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியும். www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment