மாளிகைக்காடு நிருபர்
சாய்ந்தமருது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளரும், சிலோன் மீடியா போரத்தின் தலைவருமான கலாநிதி றியாத் ஏ மஜீத் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்றமையை சிலோன் மீடியா போரம் பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு தலைவரின் இல்லத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் பொது செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பிரதித்தலைவர் எஸ். அஸ்ரப் கான், பிரதி செயலாளர் எம்.எம். ஜபீர், நிறைவேற்று குழு உறுப்பினர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர், எம்.பி.எம். றின்ஸான், என்.எம். சிராஜுதின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் ஊடகத்துறைக்கும், தனது தொழில் சார்ந்தும் செய்த சமூகப்பணிகளை பாராட்டி உரை நிகழ்த்தியதுடன் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கடந்த காலங்களில் நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment