அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றிலும் இன்று அரச வங்கி ஊழியர்கள் மற்றும் மற்றும் ஆசிரியர்கள் வைத்தியர்கள் தபால்நிலைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அரசின் வரி அறவீட்டு திட்டம் மற்றும் வழங்கப்படாத சம்பள உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து கடமைகளில் இருந்த விடுபட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரச வங்கிகள் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்ததுடன் தனியார் வங்கிகள் வழமை போன்று செயற்பட்டதை காண முடிந்தது.
அரச வங்கிகள் மூடப்பட்டிருந்தமையால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளானதுடன் பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது.
இதேநேரம் ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பால் இன்று நடைபெறவிருந்த மூன்றாம் தவணைப்பரீட்சையானது பாடசாலைகளில் நடைபெறவில்லை. ஆயினும் சில பாடசாலைகளில் அதிபர் வருகை இருந்தபோதிலும் ஆசிரியர்களின் மாணவர்கள் சமூகம் கொடுக்காத நிலையினயும் அவதானிக்க முடிந்தது.
இதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் பெற்றோர்களின் கருத்துக்கள் மூலம் உணர முடிந்தது.
இதேநேரம் அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையிலான அமைதியான பேரணி ஒன்றினை அன்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment