சட்டத்தரணிகளுக்கு இடையே கடும் சொற்சமரும் வாக்குவாதமும்




 


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியதாக கூறப்படும் வழக்கில், இன்று காலை, மார்ச் 2ஆம் தேதி, எதிரணி சட்டத்தரணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோவுக்கும், எதிர்தரப்பு சட்டத்தரணி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவுக்கும் இடையில் இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த நிலைமை ஆரம்பமானது.


இதனையடுத்து வழக்கை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவு பிறப்பித்தார்