கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவி மாகாண மாணவர் பாராளுமன்ற அமர்விற்கு தெரிவு.
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை கல்வி வலயத்திலிருந்து அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவி பாத்திமா சேஹா மாகாண மாணவர் பாராளுமன்ற அமர்விற்கு பாடசாலை பாராளுமன்ற குழுவில் இருந்து தெரிவு
செய்யப்பட்டிருக் கின்றார்.
பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர், பிரதி, உதவி அதிபர்கள் உட்பட பயிற்றுவித்த ஆசிரியர்களும் செய்த அயராத முயற்சியின் பயனாக அண்மையில் சிறந்த, திறமையான மாணவர்களைக் கொண்டு மாணவர் பாராளுமன்ற அமர்வு ஒரு பாராளுமன்றத்தை ஒத்ததாக மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இம்மாணவர்கள் மிகத் திறமையாக செயற்பட காரணமான அதிபர் ஏ.எச்.அலி அக்பர் உட்பட பயிற்சியளித்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment