குழந்தைகளின் நிகழ்வுகளில் அரசியல் அல்லது இனவாதம் பேசாதீர்கள். பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்.
இவ்வாறு மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற முன்பள்ளி நிகழ்வொன்றில் பிரதம உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.
மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை, றோயல் பாலர் பாடசாலை, அல் ரஹ்மானியா பாலர் பாடசாலை, அந் நூர் பாலர் பாடசாலை ஆகியவற்றின் ஒன்றிணைவான இந்த சம்மேளன வருடாந்த கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்..
காரைதீவு பிரதேச சபை காலத்தில் நாங்கள் கூடிய அபிவிருத்தியை செய்தது மாவடிப்பள்ளியில் தான். இனமத பேதமில்லாமல் நான் சேவையாற்றியுள்ளேன். என் மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இந்த மேடையிலும் இனவாத கண்ணோட்டத்துடன் மின்விளக்கு தொடர்பாக கோரப்பட்டது. அரசியல் இனவாதம் பேசுவதற்கு இது உரிய இடமல்ல. எனவே வேறு பொது இடத்தில் அழைத்தால் விமர்சனங்களுடன் நான் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன்.
கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது முஸ்லிம்களுடன் சேர்ந்து நான் போராடிய போது தாம் எதுவும் செய்யாமல் முடங்கி கிடந்து மொட்டுக்கு ஆதரவு திரட்டியவர்கள் இப்போது தான் வெளியே வந்து தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள, என்னை இனவாதியாக சித்தரிக்கிறார்கள். நான் கொரோனா காலத்தில் நிறைய உதவிகளை முஸ்லிம்களுக்கும் செய்துள்ளேன். நீர் இணைப்புக்களை, மின்சார இணைப்புக்களை கூட எனது சொந்த நிதியில் வழங்கியுள்ளேன்.அதனை விளம்பர படுத்தவில்லை. நான் மக்களுக்காக மக்களுடன் பயணிக்கிறேன். விமர்சனங்களையிட்டு நான் அலட்டிக்கொள்வதில்லை.
செலுத்துமாறு எம்மிடம் கேட்டனர்.
Post a Comment
Post a Comment