யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜன கல்லூரிக்கும் இடையே வருடாந்தம் இடம் பெற்றுவரும் வீரர்களின் போர் இம்முறை 21 வது தடவையாக இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு லண்டனில் இருந்து வருகை தந்த ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சருமான அருளானந்தம் கந்தராஜா( காரைதீவு) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபர் எம் .செல்வதாசன் மகாஜன கல்லூரியின் திபர் எம். மணிசேகரன் ஆகியோர் தலைமையில் நிகழ்வு ஸ்கந்தவரோதயா மைதானத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.
முன்னாள் ஸ்கந்தவரோதயா மாணவன் அருளானந்தம் மகேந்திரராஜா( காரைதீவு) உள்ளிட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சபையின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.சிறிதரன்
மற்றும் மகஜனா கல்லூரி சார்பாக சபரகமுவாக பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஜொனிற்றன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகளை அதிதிகள் வழங்கி வைத்தார்கள்.
ஆட்டநாயகனாக ஸ்கந்தவரோதயாக்கல்லூரி வீரர் என்.ஸ்ரிபனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக மகாஜனக் கல்லூரி வீரர்
எஸ்.அபர்ணனும் சிறந்த பந்துவீச்சாளராக
மகாஜனக் கல்லூரியின் கே.துவாரகனும் சிறந்த
களத்தடுப்பாளராக ஸ்கந்தவரோதயாக் கல்லூரி
யின் கே.சீராளனும் தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment
Post a Comment