சர்வதேச மகளிர் தினமும், குரு பூஜை தின நிகழ்வும்




  


 (வி.ரி. சகாதேவராஜா)

சர்வதேச மகளிர் தினமும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குரு பூஜை தின நிகழ்வும் நேற்று (8) புதன்கிழமை காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றன.

காரைதீவு பிரதேச தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் 
பிரதேச சபை வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

 தவிசாளரினாலா இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் முன்பாக இவ்விரு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிய உரையை தவிசாளர் ஜெயசிறில் நிகழ்த்த சபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் விசேட உரையாற்றினார்.
மகளிர் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ஜெயகலா சந்திரசேகர் வரன் உரையாற்றினார்.
அங்கு பெண் உத்தியோகத்தர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.