பாறுக் ஷிஹான்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை(11) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தானீஷ் ரஹ்மத்துல்லாஹ்வின் ஒருங்கிணைப்பில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக பிராந்திய தாய் செய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச் றிஸ்வின் மற்றும் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம் பசால் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க தலைவர்எம்.ரி.எம் நெளஷாத் பொது சுகாதார தாதிய அதிகாரி திருமதி ராஜேந்திரகுமார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபா மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க செயலாளர் ஏ.எல். பெளசர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment