கிறிசில், கோர விபத்து




 


ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர கோர விபத்து : 26 பேர் உயிரிழப்பு.


வடக்கு கிரீஸ் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் மிகவும் மோசமான வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

செவ்வாய் கிழமை இரவு லரிசா நகரத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.


இந்த விபத்து குறித்த தகவல்கள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தங்களுக்கு கிடைத்தது என தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

அவர்கள் வந்து பார்த்தபோது பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தினால் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது


ரயில் பெட்டிகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள தீயணைப்புத் துறையினரும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் தேடுதல் பணியை தொடர்ந்துள்ளனர்.

ரயில் விபத்திலிருந்து பிழைத்துள்ளவர்களை தாங்கள் தேடும்போது பல சோகமான காட்சிகளை கண்டதாக மீட்பு படையினர் கூறுகின்றனர்.

”ரயில் பெட்டிகளுக்குள் இருந்து நாங்கள் சிலரை பிடித்து இழுக்கும்போது சிலர் பிழைத்திருந்தனர், சிலர் காயமடைந்திருந்தனர், இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்” என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் அம்மாநில அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.


மிகவும் சோர்வடைந்திருந்த மீட்பு பணியாளர் ஒருவர் ஏ.ஃப்.பியிடம் (AFP) பேசியபோது, “இதுபோன்ற ஒரு மோசமான விபத்தை தான் இதுவரை பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.


தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சென்ற ஒரு ரயில் பெட்டி தீக்கு இரையாகியிருந்தது.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த எந்தவொரு தெளிவான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.


காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு, சுமார் 85பேரை துணை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இன்னும் சில பயணிகள் தெசல்லோனிக்கி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.