புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு துவி சக்கர வண்டிகள்




 


( காரைதீவு சகா)


 சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்யாலயத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

 இந்த வைபவம் நேற்றுமுன்தினம் பாடசாலை அதிபர் எஸ். கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.

 பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.

 இந்த துவிச்சக்கர வண்டிகளை அசிஸ்ற் ஆர் ஆர் அமைப்பின் பிரதிநிதிகளான பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ், கலாநிதி வி. சர்வேஸ்வரன் ஆகியோர் வழமைபோல அன்பளிப்பு செய்தார்கள் .

இந்த நிகழ்வில் பிரதி கல்விப் பணிப்பாளர் அப்துல் மஜீத் , கோட்டக் கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன்,உதவி கல்விப் பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா, ஏ.கபூர் ,இணைப்பாளர் ரசீத் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கற்பித்த ஆசிரியை திருமதி விஜயலதா ராமச்சந்திரன் பாராட்டி க் கௌரவிக்கப்பட்டார்.

பரீட்சைக்கு தோற்றிய ஏனைய 9 மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டியை வழங்க இருப்பதாக அசிஸ்ட் ஆர் ஆர் அமைப்பின் பிரதிநிதி கலாநிதி வி. சர்வேஸ்வரன் அங்கு உறுதி அளித்தார்.

மிகவும் கஸ்ரப்பிரதேச பாடசாலையான கணபதிபுரம்விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறைவெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற செல்வன்.சந்திரகுமார்-திசாந்-152புள்ளி
,செல்வன்.நந்தகுமார்.யஸ்மிதன்-149புள்ளி,
செல்வி.நகுலேஸ்வரன்-கிஷானிக்கா-149புள்ளி ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

பரிட்சைக்கு தோற்றிய 12பேரும் 70புள்ளிக்கு மேல் சித்தி பெற்று
 100% சித்தி பெற்று வலயத்திலே முதனிலையிலே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே ஒவ்வொரு வருடமும் சித்திபெறும் மாணவர்களுக்கு துவிச் சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதுவரை 14 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது