( வி.ரி. சகாதேவராஜா)
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 1989/1990 காலப்பகுதியில் கல்வி கற்று தற்போது கனடா மற்றும் இலங்கையில் வசிக்கும் நிதி வழங்குனர்கள் இணைந்து திருக்கோவில் -4 காயத்திரி கிராமத்தில் வீடற்ற 25 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கவுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக 5 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர்
தங்கையா கஜேந்திரன் தலைமையில்
நேற்று முன்தினம் (24) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இவ் வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக கிடைக்கப்பெற்றன .
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் , கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி, நிதி வழங்குனர் சார்பில் திருமதி சுபாசினி கிரிதரன், சி.நந்தகுமார் , திருக்கோவில்-4 கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவ் வீடுகள் அமைப்பதற்காக பிரதேச செயலகத்தால் காணிகள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment