( வி.ரி. சகாதேவராஜா)
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியமும் இணைந்து நடாத்தும் சுவாமி விபுலாநந்தரின் 131வது ஜனனதின விழா நாளை (27) திங்கட்கிழமை அவர் பிறந்த காரைதீவு மண்ணில் நடைபெறவுள்ளது.
முதன்மை அதிதியாக இலங்கை கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார். நினைவுப்பேருரையை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கி.இரகுவரன்
நிகழ்த்தவிருக்கிறார்.
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு திருமுன்னிலை அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் கலந்து ஆசி வழங்கவிருக்கிறார்.
கெளரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் ,
கிழக்கு பல்கலைக்கழக கட்புல தொழில் நுட்ப கலைத்துறைத் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம், கிழக்கு பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி நிர்மலேஸ்வரி பிரசாந்த் , சுவாமி விபுலாநந்த"நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் க.பாஸ்கரன் ஆகியோரும் மற்றும் சிறப்பு விசேட அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Post a Comment
Post a Comment