விழிப்புணர்வு

.(சுகிர்தகுமார் 0777113659 )

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தற் கோரி அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுமக்களினால் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்ற செயல்களும் வன்முறைகளும் பாடசாலை மாணவர்கள் நோக்கியதான போதைப் பொருள் விற்பனையும் பொதுமக்களாகிய தமது பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றது.

 உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பிரதேசத்தில் சூதாட்ட மையங்கள் இயங்கிவருவது தொடர்பான தகவல்களை மக்களால் வழங்கப்படுகின்றபோதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டவிரோத செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே பொலிஸ் உயர் அதிகாரிகள் அக்கறை கொண்டு அக்கரைப்பற்று பொலிசாரை இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பணிக்குமாறும் குற்றச் செயல்களுடன் நெருங்கிய தொடர்புடைய உறவை பேணும் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுப்பதாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர்.
இவ்விடயங்களை உள்ளடக்கியதான மகஜர் ஒன்றினை தயாரித்து ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் ஆணைக்குழுக்கள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்தினருக்கு கையளிக்குமாறு வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் பொதுமக்கள்
கையளித்தனர்.    