விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு





 (எம்.என்.எம்.அப்ராஸ்)


யுனிசெப்(Unicef) நிறுவனம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாவடிப்பள்ளி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொவிட் தாக்கத்தினாலும்,பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை unicef மற்றும் (PPCC) எனும் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. 

இதன் முதற்கட்டமாக ரூபா 40000 பெறுமதியான உலர்உணவு பொதியும்,இரண்டாம் கட்டமாக சிறுவர்களுடைய உள நலனை மேம்படுத்துவதற்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு Unicef நிறுவனத்தின் மாவடிப்பள்ளி தொண்டரான இசட். எம்.
நஸ்ஹான் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி.ஜாசுகி,இளைஞர் சேவை மன்ற அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் பாதுகாப்பு,கல்வி , உரிமைகள்,சிறுவர்கள் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்கள்.

அத்துடன் கிராமிய ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்