பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்




 


சென்னை: தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி. இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். 


அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.


நகைச்சுவை நடிகர் #மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கு,சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்து,தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.