(காரைதீவு சகா)
காரைதீவு பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வானது நேற்று முன்தினம் விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் .அ.சுந்தரகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் முதன்மை அதிதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் ஓய்வு மற்றும் இடமாற்றலாகிசெல்லும் நட்சத்திர அதிதிகளாக திருமதி.உம்மு சல்மா முஹமட் சதாத் (உள்ளுராட்சி உதவியாளர்), திரு.சா.மகாதேவன் (காவலாளி), திரு.த.கோவிந்தராஜா (தொழிலாளி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக செயலாளர், பொருளாளர், உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு உத்தியோகத்தர் ஊழியர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment