(வி.ரி. சகாதேவராஜா)
எமது அழகிய நாடு சீரழிவதற்கு ராஜபக்ஷ ரணில் கூட்டுக்கம்பனியே காரணம்.
இவ்வாறு திருக்கோவிலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாசா உருவாக்கிய தம்பட்டை ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படும். இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் நேற்று (31) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்..
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து சபைகளையும் கைப்பற்றி வரலாறு படைக்க இருக்கிறது.
இன்னும் மின்சார கட்டணத்தினை அதிகரிக்க எத்தனிக்கும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற மறுத்து இந்த நாட்டை பொருளாதார ரீதியிலே பின்னடைய செய்வதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை .எனவே ரணில் ராஜபக்சே அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். டெலிபோன் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் இலங்கையை வளமான நாடாக கட்டி எழுப்ப எல்லாம் மூச்சுகளையும் மேற்கொள்வோம் எனவே கிழக்கு மாகாணத்தில் காணப்படக்கூடிய தமிழ் பிரதேசங்களான திருக்கோவில் ஆலடிவேம்பு காரைதீவு நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் காணப்படக்கூடிய மக்களுடைய அன்றாட வாழ்க்கையினை உயர்த்துவதற்கு எல்லா விதத்திலும் அத்தனை முயற்சிகளையும் எடுப்பது ரணசிங்க பிரேமதாசனுடைய மகன் சஜித் பிரேமதாசர் என்பதனை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் செய்யும் அத்தனை வேலை திட்டங்களும் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ அமைச்சராகவோ இருந்து செய்யவில்லை. சேவை செய்வதற்கு பதவி ஒரு பொருட்டல்ல .சேவை செய்வதற்கு சிறந்த மனப்பான்மை மாத்திரம் இருந்தால் போதும் அதனை செய்ய முடியும் . நாங்கள் சேவை செய்து காட்டியிருக்கிறோம் எதிர்கட்சியாய் இருந்து எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் அதிகமான சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கடந்த ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தலின் போது மக்களை பிழையான முறையில் வழிநடத்தி அவருடைய மனங்களை திசை திருப்பி இந்த நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத இந்த நாட்டை நேசிக்காத இந்த நாட்டை வழிநடத்த முடியாத ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்தனர். அதற்கு எத்தனை கயவர்களின் சூழ்ச்சிக்கு மக்கள் ஆளாகியதால் கோட்டாபய போன்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்களும் ஆளாகினர்.
இம்முறை அப்படியானவர்கள் இன்னும் ஒரு வாய்ப்பைச்சுவிகரித்து அரசியல் ஜாம்பவான்களாக சித்தரிக்க முற்படுகின்றனர்.
எனவே ஏற்கனவே அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் எமது இலங்கை நாட்டை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே அப்படியான நாட்டை நேசிக்காதவர்களுடைய அசமந்த பேச்சுக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு இடம் அளித்து நாட்டை இன்னும் ஒரு படி பாதாளத்தை தள்ளிவிடாதீர்கள்.
இம்முறை இந்த ஊராட்சி மன்ற தேர்தலிலே நாங்கள் முதன் முறையாக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டெலிபோன் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம். இலங்கை முழுவதுமாக வெற்றி வாகை நிச்சயமாக நாங்கள் சூடுவோம் .எனவே எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி டெலிபோன்ஸ் இனத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் .
லஞ்ச ஊழல் ஜாதி இன மதங்களை மையப்படுத்திய அரசியல்வாதிகளை இனிமேல் நாங்கள் கூண்டோடு அவர்களை ஒழித்து விட வேண்டும். இனி ஒரு போதும் அப்படியானவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது. திருக்கோவில் பிரதேசத்திற்கும் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கும் நான் ஒரு முறை வந்திருந்தேன் .அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதேசத்தில் காணப்படக்கூடிய இரண்டு வைத்தியசாலைகளுக்கு நான் மருத்துவ உபகரணங்களை பல லட்சம் ரூபாய் செலவிலே வழங்கியிருந்தேன். இந்த பிரதேச சபை தேர்தலானது முடிவடைந்தவுடன் சபையை நாங்கள் கைப்பற்றுவோம். நான் மீண்டும் இந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்வேன். அதன் போது இன்னும் அதிகமான நலத்திட்டங்களை இந்த கிராமத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களும் அனுபவிக்கும் விதத்தில் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்.
குறிப்பாக எனது தந்தை உருவாக்கிய ஆடைத்தொழிற்சாலை தம்பட்டையில் இடைநடுவில் செயற்படாமல் நிற்கிறது .அதனை மீண்டும் கட்டி எழுப்பி இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த பிரதேசத்தில் காணப்படக்கூடிய கனிய வளங்களில் ஒன்றாகிய
இல்மனைட் கனிய வளத்தினை அகழ்வதை தடுப்போம். விவசாயிகள் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கான தொழில் முயற்சி வழிகாட்டல்களை செய்து அவர்களுடைய பொருளாதாரத்தை மேலே கொண்டு வருவதற்கு உதவி செய்வோம்.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆனது ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கவிருக்கிறது. . என்றார்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment