நாவிதன்வெளி பகுதியில் பெரும்போக நெல் கொள்வனவு




 


பாறுக் ஷிஹான்


 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களினை அடிப்படையாகக் கொண்டு 2022/2023 ம் ஆண்டிற்கான பெரும் போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்  அதிமேதகு ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தீர்மானத்திற்கமைய நாடு பூராகவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய   நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரிசி ஆலைகளில் நெல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் செயற்திட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் மத்தியமுகாம் பகுதியில் இன்று  இடம்பெற்றது

இந் நிகழ்வுக்கு  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ கலீஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளீர் அபூபக்கர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.