மரநடுகை





 நூருல் ஹுதா உமர்


இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியன்- கரைவாகுபற்று ஆற்றங்கரையோரம் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் கலந்து கொண்டதுடன் மேலும் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக  உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட  முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எச்.ஏ. அமிர், கிராம உத்தியோகத்தர்கள்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு மரநடுகை நிகழ்வில் ஈடுபட்டனர்.