புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு





மாளிகைக்காடு நிருபர்)


உலக புற்றுநோய் தடுப்பு தினத்தை (2023.02.04) முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக நடைபெற்று வருகின்றன

அதில் ஒரு அங்கமாக இன்று 2023.01.06 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பிராந்திய வாய் சுகாதார நிபுணர் எம்.எச்.எம்.சரூக் அவர்களினால் பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு குறித்த விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணிமனையின் பிரிவுத்தலைவர்களும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தாய் சேய் நல பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச் ரிஸ்பின் அவர்களினால் விசேட உரை ஒன்று நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது