(காரைதீவு சகா)
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் சீனித்தம்பி பாலசிங்கன் தனது அறுபதாவது வயதில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
அதிபர் சீ.பாலசிங்கன் தனது 35 வருட கல்விச் சேவையிலும் 25வருட அதிபர் சேவையிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
துறைநீலாவணையில் பிறந்து தனது இல்லறத்தை நாவிதன்வெளியில் அமைத்துக்கொண்ட திரு. பாலசிங்கன் அதிபர் அவர்கள் தரம் 1 அதிபராவார்.
நாவிதன் வெளி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் என்றும் அழியா தடம் பதித்த திருவாளர் பாலசிங்கன் அதிபர் அவர்கள் சிறந்த கணித பாட ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"குரு பிரதீபா" விருதினை இரு முறை தனதாக்கிக்கொண்டவர்.
இவர் இறுதியாக நாவிதன் வெளி அன்னமலை மகாவித்தியாலய தேசிய பாடசாலை அதிபராக சேவையாற்றி ஓய்வு பெறுகின்ற அவரை அன்றே
சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் நிருவாகத்திற்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம் வை. யாசிர் அரபாத் கோட்டக்கல்வி பணிப்பாளர் பி பரமதயாளன் உதவி கல்விபணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு அவரது உன்னத சேவைகளை பாராட்டினார்கள்.
Post a Comment
Post a Comment