'மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்'




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட 'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்' எனும் 359 பக்கங்களை கொண்டதான ஆய்வு நூல் எதிர்வரும் 2023.02.12 ஆம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது.
 ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன். புதிய வருடத்தின் முதல் நிகழ்வாக இந்நூல் வெளியீடு செய்வதற்கான ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டு;ள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்கதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்நூலினை அம்பாரை மாவட்டத்தின்; மிகப்பெரும் ஆய்வாளராக கருதப்படும் ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்கள் நூலாசிரியராக இருந்து உருவாக்கியுள்ளதுடன் 359 பக்கங்களை கொண்டதாகவும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் உருவாக்கத்திற்கான நிதி ஏற்பாட்டினை ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை வழங்கியுள்ளதுடன் வெளியீடு செய்து வைக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்வியலாளர்கள் அரச உயர் அதிகாரிகள் இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் நிலையில் அனைத்து நலன்விரும்பிகளையும் எற்பாட்டாளர்கள். அன்புடன் அழைக்கின்றனர்